Monday, August 15, 2011
15-8-2011
அதை செய்யாதே,
அங்கு போகாதே,
அளவோடு பழகு,
உரக்க பேசாதே
போன்ற கட்டுபாடுகள்
இன்றும் இருக்கின்றன;
ஆண் பிள்ளை என்றும்
பெண் பிள்ளை என்றும்
வேற்றுமைகள் இன்றும்
மறையாமல் இருக்கின்றன...
நாடு முன்னேற்ற பாதையில்
நகரும் போதும்
வறுமையும், கொள்ளைகளும்,
பாதுகாப்பின்மையும்,சில கட்டுப்பாடுகளும்
இன்னும் இருக்கின்றன
நம் மண்ணில்...
ஆனாலும் கொண்டாடுகிறோம்
நம் நாடு "சுதந்திர நாடு" என்று...
பெற்றவைகள் சில, ஆனாலும்
இழந்தவைகள் இன்னும்
பெற முடியாதவைகளாகவே
இன்றும் இருக்கின்றன...
Subscribe to:
Posts (Atom)






