en pakkam
Thursday, June 23, 2011
23-06-2011
அந்த ஒருத்திக்காக காத்திருக்கிறேன்
இன்றுவரை...
என் வருடத்தின்
நாட்களையும், நொடிகளையும்
திருடிக்கொண்டு சென்ற ஒருத்தியை
தேடிக்கொண்டிருக்கிறேன் இன்றுவரை;
பார்த்தால் தண்டிப்பேன்-என்
இதயத்தை என்னிடமே
விட்டு சென்றதற்காக மட்டுமல்ல,
என் மகிழ்ச்சியை
என்னிடமிருந்து பறித்து சென்றதற்காகவும்...
23-06-2011
என் வாழ்க்கையின்
படிக்கப்படாத பக்கங்களாக
என் தனிமையும்,
என் கனவுகளும்...
இதுவரை யாருக்கும் புரியாத
என் மௌன மொழியை
புரிந்துகொள்ளும்
ஒரு ஜீவனுக்காக
காத்திருந்தேன்- அது
நான் மட்டுமே என்று அறியாமல்;
தேடல்கள் முடியவில்லை இன்னும்...
28-03-2011
உன் முகம் பார்த்து
உன் எதிரே நின்று
என் மன்னிப்பை
கேட்கும் துணிவு
இன்று வரை இல்லை
என்னிடம்...
28-03-2011
இப்போதும் உன் பேச்சு
மிக சாதாரணமாகவே
இருக்கிறது என்னிடம்;
உன் கண்களில் தெரியும்
சிறு வருத்தம் மட்டும்
எவருக்கும் தெரியாமல்
என்னை தண்டிக்கிறதோ?????
29-07-2009
உனக்காக பேச ஆசைதான்-
சந்தர்ப்பம்தான்
அமைவதே இல்லை எனக்கு...
03-08-2009
உன்னை பிறர் ரசிக்கும்போதும்
கோபமே வருவதில்லை எனக்கு;
ஆனால் உன்னை பிறர்
உரிமை கொண்டாடும்போது
கோபமே வருகிறது எனக்கு...
02-07-2009
நீ, நான்
என்ற வார்த்தைகள்
நாம் என்று
உருமாற மறுக்கின்றன-ஏனெனில்
உனக்கும் எனக்குமான
இடைவெளி வெகுநீளம்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)